Saturday, 2 May 2020

Emil Daughter Larusa Dance

Cinima News

Tharmarajah Son of Thuvarakan Talent


பாடலுக்கு 10 இசைக்கருவிகள் கொண்டு உருவாக்கப்பட்ட Multi - Instrumental Asian Mix Cover Version .. கீழே உள்ள Link மூலம் முழுமையான காணொளியைக் காண முடியும்.




அரிசி மாவில் சுவையான ஸ்வீட் செய்வது எப்படி



தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 1 கப்
 பால் – 1 கப்
 சர்க்கரை – 1/2 கப்
 தேங்காய் துருவல் – 1/2 கப்
 ஏலக்காய் தூள் – சிறிதளவு


 அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 1:

 முதலில் அரிசி மாவு 1 கப் எடுத்துக்கொள்ளவும். அடுத்து இந்த ரெசிபி ரெடி பண்ண கடாயில் 1 கப் பால் சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் சுவை பிடிக்காதவர்கள் தண்ணீர் கூட சேர்த்துக்கொள்ளலாம். இந்த பால் மிதமான அளவிற்கு சூடு வந்தால் போதும். அதன்பிறகு பாலுடன் சர்க்கரை 1/2 கப் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து நன்றாக கிளற வேண்டும்.

 அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 2:

 அடுத்து தேங்காய் துருவல் 1/2 கப், பாலுடன் சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ள வேண்டும். அடுத்து வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏலக்காய் தூள் சேர்த்தபிறகு இதனையும் நன்றாக கிளற வேண்டும்.


 அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 3:

 அரிசி மாவு ரெசிபி: அடுத்து அந்த பாலில் எடுத்துவைத்துள்ள அரிசி மாவை இதனுடன் சேர்க்க வேண்டும். மிதமான சூட்டில் வைத்தே இதை நன்றாக கிளறிவிட வேண்டும். அடுத்து நன்றாக கிளறிய பிறகு அடுப்பை நிறுத்தி கொள்ளலாம். 1 மணி நேரம் இதை மூடிவைக்க வேண்டும். நன்றாக ஆறியபின் தனியாக ஒரு பவுலில் மாற்றிக்கொள்ளவும். அடுத்து இந்த மாவை சப்பாத்தி மாவின் பதம் போல் நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.







அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 4:


 அரிசி மாவு ரெசிபி: அடுத்து சப்பாத்தி மாவின் பதம் போல் வந்த பிறகு உருண்டையாக உருட்டி அதை தட்டி கொள்ளவும். மாவை உருண்டை வடிவில் தட்டிய பிறகு பாத்திரத்தின் மூடி அல்லது குக்கி கட்டரால் கட் செய்துகொள்ளவும். எல்லா மாவையும் இதே போல் செய்து தனியாக ஒரு தட்டில் எடுத்துவைத்து கொள்ளவும்.


 அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 5:


 அரிசி மாவு ஸ்நாக்ஸ்: அடுத்து இந்த அரிசி மாவில் நட்ஸ் வகைகளையும் சிறிதாக நறுக்கி சேர்த்து செய்தால் இன்னும் சுவை கிடைக்கும். இப்போது தனியாக தட்டில் எடுத்து வைத்ததை வேக வைக்க வேண்டும். அதற்கு தனியாக ஒரு கடாயில் 2 கப் அளவிற்கு தண்ணீர் எடுத்து கொண்டு உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்துக்கொள்ளவும்.


 அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 6:

 ஸ்டாண்ட் இல்லாத பட்சத்தில் வீட்டில் இருக்கும் இட்லி பாத்திரம் கூட பயன்படுத்தலாம். அடுத்து இந்த ஸ்வீட்டின் மேல் ஆவி நீர் பட்டால் ஸ்வீட்டானது வீணாகி விடும். அதனால் மூடியின் மேல் துணியை கட்டி மூடிவைக்க வேண்டும். அப்போதுதான் ஆவி நீர் ஸ்வீட் மேல் விழாது.

 துணியை கட்டி மூடியபிறகு மிதமான சூட்டில் 2 நிமிடம் வேகவைக்க வேண்டும். அரிசி மாவு ஏற்கனவே நன்றாக வெந்ததனால் இப்போது 2 நிமிடம் வேகவைத்தால் போதும். 2 நிமிடம் வேகவைத்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கிக்கொள்ளலாம். அடுத்ததாக சிறிதளவு தேங்காய் துருவி வைத்துக்கொள்ளவும்.





 அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 8:


பின் வேக வைத்த கேக்கை தேங்காய் துருவலில் போட்டு கேக்கின் இரண்டு பகுதியிலும் தொட்டு எடுத்துக்கொள்ளவும். அடுத்து கேக் அழகாக தெரிவதற்கு பிஸ்தாவை கேக்கின் மேல் வைக்கவும்.


 அவ்ளோதாங்க இந்த அரிசி மாவு கேக் ரெடி. அரிசி மாவில் செய்த மாறியே இருக்காது அவ்ளோ ஒரு சுவையான ரெசிபி இது. கண்டிப்பா எல்லாரும் உங்க வீட்டுல ட்ரை பண்ணி பாருங்க.

கொடிய கொரோனாவினால் உடலின் மொத்த உறுப்புகளும் செயலிழந்து மரணத்தை நேரில் பார்த்து மீண்டு வந்த சிறுமி

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கொரோனாவுக்கு சிக்கிய 12 வயது சிறுமி, தாம் மீண்டு வந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.லூசியானா மாகாணத்தில் கோவிங்டன் பகுதியில் பெற்றோருடன் குடியிருந்து வருபவர் 12 வயதான ஜூலியட் டேலி.ஏப்ரல் தொடக்கத்தில் வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிக்கு உள்ளானார் ஜூலியட். 


ஆனால் மருத்துவ ஊழியரான ஜூலியட்டின் தாயார் அந்த அறிகுறிகளை குடல் அழற்சி என்றே கருதியுள்ளார். காரணம் கொரோனாவுக்கான அடிப்படை அறிகுறிகளான வரட்டு இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் என எதுவும் அவருக்கு இல்லை என்பதே.ஆனால், ஜூலியட்டின் உதடுகள் திடீரென்று நீல நிறத்தில் மாறத் தொடங்கியதும் தாயார் ஜெனிபர் மகளையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.


மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் ஜூலியட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திடீரெறு ஜூலியட்டுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் தீவிர முதலுதவி அளித்து, அங்கிருந்து அருகாமையில் உள்ள முதன்மை மருத்துவமனைக்கு ஜூலியட்டை அனுப்பி வைத்துள்ளனர்.மாகாண முதன்மை மருத்துவமனையில் 10 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்துள்ளார் ஜூலியட்.நான்கு நாட்கள் செயற்கை சுவாசத்தின் உதவியில் சிகிச்சை நடந்துள்ளது. 




அதன் பின்னர் சுய நினைவை இழந்துள்ளார் ஜூலியட். இந்த நிலையில் அவருக்கு உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழக்க துவங்கியுள்ளது. மருத்துவர்களின் தீவிர முயற்சியால் ஜூலியட் படிப்படியாக மீண்டுள்ளார்.


தாம் மரணத்தை நேரில் பார்த்ததாக கூறும் சிறுமி ஜூலியட், பெற்றோருடன் இன்னும் சில காலம் வாழ வேண்டும் என்ற ஆசையாலயே மீண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி கொரோனாவிலிருந்து குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா

ஜா-எலா பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று
த் தாக்கம் இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.


மார்ச் 17ம் திகதி கோடாவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்றதன் பின்னர் குணமடைந்தார் என ஏப்ரல் 17ம் திகதி அன்று வீடு திரும்பினார்.


இதன் பின்னர் திடீரென இன்று மார்பு வலி காரணமாக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நோயாளி பி.சி.ஆருக்கு மீண்டும் பரிசோதிக்கப்பட்டார். 


அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று தெரியவந்தது.பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கோடாவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மரக்கறி வகைகளில் கொரோனா வைரஸ் பரவுமா மரக்கறிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வருகின்றது. இநத நிலையில் இதனால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களில் கொரோனா வைரஸ் பரவுமா? என்ற கேள்வி பலரது மனதிலும் தற்போது எழுந்துள்ளது.உண்மை என்னவெனில் இதுவரை அப்படி எதுவும் நிரூபிக்கப்படவில்லை. 


இருப்பினும் உலக சுகாதார அமைப்பு சில பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க அறிவுறுத்துகிறது. கீரை வகைகள்:கீரைகளை அலசும்போது அசுத்தமாக இருக்கும் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி மூழ்கும் அளவிற்கு ஊற வையுங்கள். சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பின் வேர்களில் மண் நீங்கும் வரை அலசி சுத்தம் செய்து அதன் பிறகு கீரையைக் கிள்ளி பயன்படுத்துங்கள்.


 காய்கறி, பழங்கள்:காய்கறி, பழங்களை வெளியிலேயே நன்கு தண்ணீரில் அலசிவிட்டு உள்ளே எடுத்துச் செல்லலாம். 15 நிமிடங்களுக்கு அவை அப்படியே தண்ணீரிலேயே ஊற வைத்தலும் நல்லது.


வேர் வகைக்காய்கள்:கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு, முள்ளங்கி என வேர் வகைக் காய்களை வாங்கி வந்ததும் தண்ணீரில் நன்கு அலசி ஓடும் தண்ணீரிலேயே பீலர் வைத்து தோலை சீவுங்கள். பின் மீண்டும் தண்ணீரில் மூழ்க வைத்து நறுக்கி சமைக்க பயன்படுத்துங்கள். 


 காளான்:காளான் பயன்படுத்தினால் அவற்றை தண்ணீரில் நன்கு அலச முடியாது. இருப்பினும் இந்த சமயத்தில் சுத்தம் அவசியம். எனவே தண்ணீரில் ஒரு அலசு அலசி உடனே எடுத்துவிடுங்கள். 


பின் அதில் ஏதேனும் அழுக்கு இருந்தால், கைகளால் எடுத்துவிட்டு உடனே துணியில் பரப்பி உலர்த்தி எடுங்கள்.இவை தவிற பீன்ஸ், அவரை, தக்காளி என மற்ற காய்கறிகளைக் கழுவும் போது, வெது வெதுப்பான சுடு நீரில் அலசிப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றது.