Saturday 2 May 2020

கொடிய கொரோனாவினால் உடலின் மொத்த உறுப்புகளும் செயலிழந்து மரணத்தை நேரில் பார்த்து மீண்டு வந்த சிறுமி

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கொரோனாவுக்கு சிக்கிய 12 வயது சிறுமி, தாம் மீண்டு வந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.லூசியானா மாகாணத்தில் கோவிங்டன் பகுதியில் பெற்றோருடன் குடியிருந்து வருபவர் 12 வயதான ஜூலியட் டேலி.ஏப்ரல் தொடக்கத்தில் வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிக்கு உள்ளானார் ஜூலியட். 


ஆனால் மருத்துவ ஊழியரான ஜூலியட்டின் தாயார் அந்த அறிகுறிகளை குடல் அழற்சி என்றே கருதியுள்ளார். காரணம் கொரோனாவுக்கான அடிப்படை அறிகுறிகளான வரட்டு இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் என எதுவும் அவருக்கு இல்லை என்பதே.ஆனால், ஜூலியட்டின் உதடுகள் திடீரென்று நீல நிறத்தில் மாறத் தொடங்கியதும் தாயார் ஜெனிபர் மகளையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.


மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் ஜூலியட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திடீரெறு ஜூலியட்டுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் தீவிர முதலுதவி அளித்து, அங்கிருந்து அருகாமையில் உள்ள முதன்மை மருத்துவமனைக்கு ஜூலியட்டை அனுப்பி வைத்துள்ளனர்.மாகாண முதன்மை மருத்துவமனையில் 10 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்துள்ளார் ஜூலியட்.நான்கு நாட்கள் செயற்கை சுவாசத்தின் உதவியில் சிகிச்சை நடந்துள்ளது. 




அதன் பின்னர் சுய நினைவை இழந்துள்ளார் ஜூலியட். இந்த நிலையில் அவருக்கு உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழக்க துவங்கியுள்ளது. மருத்துவர்களின் தீவிர முயற்சியால் ஜூலியட் படிப்படியாக மீண்டுள்ளார்.


தாம் மரணத்தை நேரில் பார்த்ததாக கூறும் சிறுமி ஜூலியட், பெற்றோருடன் இன்னும் சில காலம் வாழ வேண்டும் என்ற ஆசையாலயே மீண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment