Saturday 2 May 2020

குழந்தைகளைக் குறி வைக்கும் புதிய பேராபத்து கொரோனாவின் விளைவா தீவிர ஆய்வில் விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகள், சிறுவர்களை தாக்கும் அழற்சி நோய் (maladie inflammatoire grave) குறித்த தகவலைகள் அதிகரித்து வருகிறது.மோசமான இந்த அழற்சி நோய் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் அதிகம்தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.பிரிட்டனில் கடந்த ஒரு வாரமாக பெரும் கவலைகளை இந்த அழற்சி நோய் ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரான்ஸில் அழற்சி நோய் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது உயிராபத்தானதாக இருப்பதாக அந்தநாட்டு சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.இது கொரொனா வைரசின் தாக்குதலா என்ற ஆராய்ச்சி நடந்து வருவதாகவும், இதனை மிகவும் தீவிர விடயமாக எடுத்து ஆய்விற்குள்ளாக்கி உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதனை நான் மிகவும் தீவிர விடயமாக எடுத்துள்ளேன். இது வரைக்கும், எங்களிடம் மருத்துவ ரீதியான எந்த விளக்கங்களும் தரவுகளும் இல்லை. இது கொரொனா வைரசின் தாக்கமா, அல்லது வேறு ஏதும் தொற்றின் தாக்கமா என்பது அறியப்படல் வேண்டும். தற்போதைக்கு எங்களிடம் இதற்கான பதில் இல்லை” என ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.


பிரான்ஸில் பாடசாலைகளை ஆரம்பிக்க தயார்படுத்தும் நிலையில், சிறு பிள்ளைகள் கொரொனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட மாட்டார்கள் என்று அரசு தெரிவித்துள்ள நிலையில், தற்போது சிறு பிள்ளைகளையே கொரொனா தாக்குகின்றதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.இது கொரோனாவின் அறிகுறி என பிரிட்டன் சுகாதாரத்துறையினர் நம்புகிறார்கள். 


இந்த அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் கொரோனா வைரஸால் உயிரிழந்ததாக பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.நாக்குகள், தொண்டையில் கொப்புளம், கண்கள் சிவப்பது, வாந்தி, சோர்வு, சுவாசப்பிரச்சனை ஆகியவை இந்த அழற்சியின் விளைவுகள். உடலில் சிவப்பு கொப்புளங்கள் தோன்றுகிறது.இந்த அழற்சியினால் பாதிக்கப்படுபவர்கள் முகம், கண் வீங்கி பசியின்மையுடன் காணப்படுகிறார்கள். குழந்தைகள், சிறுவர்களே இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.


குழந்தைகளிடம் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், இந்த வகையான விளைவுகள் தென்படுகிறதா என்பது குறித்து ஆராயப்படுகிறது.கவாசாகி (Kawasaki) நோய் என்பது இரத்த நாளங்களின் சுவர்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் ஒரு வகை அழற்சி நோயாகும். அதையொத்ததாக இந்த அழற்சி தென்படுகிறது. 

வீக்கம் இதய தமனிகளை பலவீனப்படுத்தும், இது இதயத்திற்கு இரத்தத்தை வழங்குவதை தடைப்படுத்தி, உயிரிழப்பை ஏற்படுத்தலாம். இந்த நிலை ஒவ்வொரு 100,000 பேரில் எட்டு குழந்தைகளையும் பாதிக்கிறது. ஆனால் இதையொத்த அறிகுறிகளுடன் அண்மை நாளில் பிரிட்டனில் பல குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பிரிட்டனில் சுமார் 20 சிறுவர்கள் இந்த அறிகுறியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment