Saturday, 2 May 2020

கொடிய கொரோனாவினால் உடலின் மொத்த உறுப்புகளும் செயலிழந்து மரணத்தை நேரில் பார்த்து மீண்டு வந்த சிறுமி

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கொரோனாவுக்கு சிக்கிய 12 வயது சிறுமி, தாம் மீண்டு வந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.லூசியானா மாகாணத்தில் கோவிங்டன் பகுதியில் பெற்றோருடன் குடியிருந்து வருபவர் 12 வயதான ஜூலியட் டேலி.ஏப்ரல் தொடக்கத்தில் வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிக்கு உள்ளானார் ஜூலியட். 


ஆனால் மருத்துவ ஊழியரான ஜூலியட்டின் தாயார் அந்த அறிகுறிகளை குடல் அழற்சி என்றே கருதியுள்ளார். காரணம் கொரோனாவுக்கான அடிப்படை அறிகுறிகளான வரட்டு இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் என எதுவும் அவருக்கு இல்லை என்பதே.ஆனால், ஜூலியட்டின் உதடுகள் திடீரென்று நீல நிறத்தில் மாறத் தொடங்கியதும் தாயார் ஜெனிபர் மகளையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.


மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் ஜூலியட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திடீரெறு ஜூலியட்டுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் தீவிர முதலுதவி அளித்து, அங்கிருந்து அருகாமையில் உள்ள முதன்மை மருத்துவமனைக்கு ஜூலியட்டை அனுப்பி வைத்துள்ளனர்.மாகாண முதன்மை மருத்துவமனையில் 10 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்துள்ளார் ஜூலியட்.நான்கு நாட்கள் செயற்கை சுவாசத்தின் உதவியில் சிகிச்சை நடந்துள்ளது. 




அதன் பின்னர் சுய நினைவை இழந்துள்ளார் ஜூலியட். இந்த நிலையில் அவருக்கு உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழக்க துவங்கியுள்ளது. மருத்துவர்களின் தீவிர முயற்சியால் ஜூலியட் படிப்படியாக மீண்டுள்ளார்.


தாம் மரணத்தை நேரில் பார்த்ததாக கூறும் சிறுமி ஜூலியட், பெற்றோருடன் இன்னும் சில காலம் வாழ வேண்டும் என்ற ஆசையாலயே மீண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி கொரோனாவிலிருந்து குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா

ஜா-எலா பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று
த் தாக்கம் இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.


மார்ச் 17ம் திகதி கோடாவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்றதன் பின்னர் குணமடைந்தார் என ஏப்ரல் 17ம் திகதி அன்று வீடு திரும்பினார்.


இதன் பின்னர் திடீரென இன்று மார்பு வலி காரணமாக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நோயாளி பி.சி.ஆருக்கு மீண்டும் பரிசோதிக்கப்பட்டார். 


அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று தெரியவந்தது.பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கோடாவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மரக்கறி வகைகளில் கொரோனா வைரஸ் பரவுமா மரக்கறிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வருகின்றது. இநத நிலையில் இதனால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களில் கொரோனா வைரஸ் பரவுமா? என்ற கேள்வி பலரது மனதிலும் தற்போது எழுந்துள்ளது.உண்மை என்னவெனில் இதுவரை அப்படி எதுவும் நிரூபிக்கப்படவில்லை. 


இருப்பினும் உலக சுகாதார அமைப்பு சில பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க அறிவுறுத்துகிறது. கீரை வகைகள்:கீரைகளை அலசும்போது அசுத்தமாக இருக்கும் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி மூழ்கும் அளவிற்கு ஊற வையுங்கள். சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பின் வேர்களில் மண் நீங்கும் வரை அலசி சுத்தம் செய்து அதன் பிறகு கீரையைக் கிள்ளி பயன்படுத்துங்கள்.


 காய்கறி, பழங்கள்:காய்கறி, பழங்களை வெளியிலேயே நன்கு தண்ணீரில் அலசிவிட்டு உள்ளே எடுத்துச் செல்லலாம். 15 நிமிடங்களுக்கு அவை அப்படியே தண்ணீரிலேயே ஊற வைத்தலும் நல்லது.


வேர் வகைக்காய்கள்:கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு, முள்ளங்கி என வேர் வகைக் காய்களை வாங்கி வந்ததும் தண்ணீரில் நன்கு அலசி ஓடும் தண்ணீரிலேயே பீலர் வைத்து தோலை சீவுங்கள். பின் மீண்டும் தண்ணீரில் மூழ்க வைத்து நறுக்கி சமைக்க பயன்படுத்துங்கள். 


 காளான்:காளான் பயன்படுத்தினால் அவற்றை தண்ணீரில் நன்கு அலச முடியாது. இருப்பினும் இந்த சமயத்தில் சுத்தம் அவசியம். எனவே தண்ணீரில் ஒரு அலசு அலசி உடனே எடுத்துவிடுங்கள். 


பின் அதில் ஏதேனும் அழுக்கு இருந்தால், கைகளால் எடுத்துவிட்டு உடனே துணியில் பரப்பி உலர்த்தி எடுங்கள்.இவை தவிற பீன்ஸ், அவரை, தக்காளி என மற்ற காய்கறிகளைக் கழுவும் போது, வெது வெதுப்பான சுடு நீரில் அலசிப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

சளி காய்ச்சலைப் போக்க நம் முன்னோர்கள் குடித்த கசாயம்


இன்றைக்கு புதிது புதிதாக உருவாகும் அனைத்து விதமான நோய்களையும் கட்டுப்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது துளசி. இதனாலேயே துளசி செடியை நாட்டு மருத்துவத்தில் மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொருவர் வீட்டிலும் துளசியை வளர்ப்பதன் மூலம் நோயற்ற வாழ்க்கையை வாழலாம். சுமார் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், யாருக்காவது இருமல், சளி, காய்ச்சல் என்றால் இருக்கவே இருக்குது துளசி கசாயம் என்பார்கள்.

இது 1960 மற்றும் 70ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு நன்கு தெரியும். துளசி கசாயத்தை தொடர்ச்சியாக மூன்று வேளைக்கு மூன்று நாட்கள் துளசி கசாயத்தை குடித்து வந்தால் எப்படிப்பட்ட காய்ச்சலாக இருந்தாலும் பறந்தோடி விடும். இன்றைக்கும் பெரும்பாலான கிராமப்புற மக்கள் துளசி கசாயத்தை தான் பயன்படுத்தி பயனடைந்து வருகின்றர். 

தொழில்நுட்பமும், மருத்துவ வசதிகளும் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், யாரையாவது காய்ச்சலுக்கும், சளி மற்றும் இருமலுக்கும் துளசி கசாயத்தை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று சொன்னால், ஏளனமாக சிரித்து கிண்டலடிப்பார்கள். உண்மையிலேயே அதை பயன்படுத்தி பார்த்திருந்தால் தான் அதன் மருத்துவ மகத்துவம் தெரியும். இதனால் தான் துளசி செடியை மூலிகைகளின் ராணி என்று அழைக்கின்றனர். 

 துளசியின் மருத்துவ குணம் துளசியின் மருத்துவ குணத்தால் நாட்டு மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்
திலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசி செடியின் இலை, பூ, வேர் மற்றும் தண்டுப் பகுதி என அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்ததாகும். நாள்தோறும் ஒரு துளசி இலையை மென்று தின்று வந்தால், சிறுகுடல், பெருங்குடல், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். துளசியின் மகிமை துளசி செடியை வீட்டில் வளர்ப்பதற்கு மற்றொரு காரணம், இது மற்ற தாவரங்களை விட, அதிக அளவில் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவையும் நச்சுப்புகையையும் தனக்குள் கிரகித்துக்கொண்டு அவற்றை சுத்திகரித்து, சுத்தமான காற்றை வெளியிடும் தன்மை கொண்டது.

மேலும் துளசி செடி இருக்கும் இடத்தில் பாம்பு, தேள் என எந்தவித விஷ ஜந்துக்களும் அண்டாது. மூலிகைகளின் ராணி மூலிகைகளின் ராணி எனப்படும் துளசி செடிக்கு திவ்யா, திருத்துழாய், துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, துளசி, கிருஷ்ணதுளசி, ராமதுளசி என பல்வேறு பெயர்களும் உண்டு. துளசியின் மருத்துவ குணத்தால் நாட்டு மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசி செடியின் இலை, பூ, வேர் மற்றும் தண்டுப் பகுதி என அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்ததாகும். தினமும் சாப்பிடுங்க துளசி நாள்தோறும் ஒரு துளசி இலையை மென்று தின்று வந்தால், சிறுகுடல், பெருங்குடல், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். அதோடு வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனையும் காணாமல் போய்விடும். 


இன்றைக்கு புதிது புதிதாக உருவாகும் அனைத்து விதமான காய்ச்சலையும் கட்டுப்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது துளசி செடி. சிறு வயதில் இருந்தே துளசி இலைகளை மென்று தின்றுவந்தால், சர்க்கரை நோய் நாம் இருக்கும் திசையை எட்டிக்கூட பார்க்காது. துளசி சாறு மகிமை துளசி இலையை சாறெடுத்து அதனோடு எலுமிச்சை சாறையும் சேர்த்து மிதமாக சூடுபடுத்தி கூடவே சிறிது தேன் கலந்து, உணவு சாப்பிட்ட பின் அரைமணி நேரம் கழித்து அருந்தி வந்தால் உடல் எடை குறைய தொடங்கும். 


துளசி இலையோடு சிறிது முருங்கை இலையையும் சேர்த்து சாறு பிழிந்து அதில் சுமார் 50 மில்லி கிராம் அளவு மட்டுமே எடுத்துக்கொண்டு, அதோடு சிறிது சீரக பொடியையும் சேர்த்து காலை மாலை என இரு வேளைகளில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த நோய் கட்டுக்குள் இருக்கும். இந்த மருத்துவ முறையை பயன்படுத்தும்போது உப்பு, புளிப்பு, காரம் குறைந்த உணவுகளை மட்டும் சாப்பிட்டு வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. துளசி இலையை எலுமிச்சை சாறுடன் சேர்த்து அரைத்து தோல் வியாதிகளுக்கு பற்று போடலாம். 


 துளசியும் வேப்பிலையும் துளசி இலை, எலுமிச்சை சாறுடன், சிறிது வேப்பிலையை சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் தேமல் மறையும். செம்பு பாத்திரத்தில் தேவையான அளவு தூய தண்ணீர் விட்டு அதில் துளசி இலையை போட்டு எட்டு மணி நேரம் வரை மூடி ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் என்றும் இளமையுடனும், தோல் சுருக்கமின்றியும், கண் பார்வை குறைபாடு இன்றியும் வாழலாம்.

வீட்டில் தொடர்ந்து முடங்கிக் கிடப்பதால் தூக்கமில்லையா நிம்மதியான தூக்கத்திற்கு சிறந்த தீர்வு என்ன

“நிறைய தண்ணீர் குடித்துவிட்டேன், கடந்த சில மணி நேரங்களாக மொபைலைக் கூட பார்க்கவில்லை. ஒன்று, இரண்டு, மூன்று என அறுநூறு வரை எண்ணிவிட்டேன். ஆனாலும் தூக்கம் வரவில்லை.சமீபத்தில் பலர் இவ்வாறு கூறுகின்றனர். 

ஊரடங்கு நிலையில் வீட்டில் இருந்தபடியே சரியான நேரத்தில் தூங்க என்ன செய்ய வேண்டும் ?கொரோனா பரவுவதால் ஊரடங்கு நிலை அறிவித்த பிறகு தூங்க முடியவில்லை என பலர் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 



ஊரடங்கு உத்தரவிற்கு முன் சரியான நேரத்தில் தூங்கியவர்கள் கூட இப்போது தூக்கமின்மை பிரச்சனையால் தவித்து வருகின்றனர். சரியான நேரத்தில் தூங்குவதற்கு என்ன செய்யவேண்டும்? பொதுவாக அதிகாலை எழுந்து உடற்பயிற்சி மேற்கொண்ட பிறகு அலுவலகம் சென்று விட்டு, வீடு திரும்பியவுடன் மற்றொரு முறை உடற்பயிற்சி, பிறகு உறக்கம் என ஒருவரின் அன்றாட வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும். 

ஆனால் இப்போது வீட்டை விட்டு வெளியில் சென்று உடற்பயிற்சி மேற்கொள்ளும் நிலை இல்லை.எனவே பலரின் அன்றாடப் பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சரியான அன்றாடப் பழக்க வழக்கங்களே நல்ல தூக்கம் வருவதற்கு முக்கிய அம்சமாக உள்ளது என லாபோர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கெவின் மார்கன் கூறுகிறார்.தூக்கம் குறித்து பல ஆண்டுகளாக கெவின் மார்கன் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். 


 ஊரடங்கு உத்தரவு பலரின் நடைமுறை வாழ்க்கையை மாற்றியுள்ளதே தூக்கமின்மைக்கு முக்கிய காரணம் என கெவின் கூறுகிறார்.உங்களின் தினசரி வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் எப்போதும் போல காலை சீக்கிரம் எழுந்து உடற்பயிற்சி மற்றும் அன்றாட வேலைகளை செய்ய துவங்கினால் இரவு சரியான நேரத்தில் தூங்க முடியும். 


குறிப்பாக தற்போது பலர் பகலில் தூங்குகின்றனர், இந்த சூழலில் அந்த பழக்கத்தை முற்றிலும் கைவிடுங்கள். அதுவே இரவு நேரத்தில் தூக்கமின்மையை ஏற்படுத்த முக்கிய காரணம். பகலைவிட இரவில் தூங்குவதுதான் மிகவும் அவசியம். அதுவே ஆரோக்கியமானதும் கூட, என்கிறார் கெவின் மார்கன்.சூரிய ஒளி தேவை:

இந்த முடக்க நாட்களில் நம்மால் வெளியில் செல்ல முடியவில்லை, அதுவும் நம் தூக்கத்தை பாதிக்கலாம். நமது கண்களுக்கு சூரிய ஒளி தேவை. மெலடோனின் ஹார்மோன்தான் நமது தூக்கத்தை சீராக வைத்திருக்க உதவும். உடலில் இந்த ஹார்மோன் சரியான அளவில் இருக்கவேண்டுமானால் நமக்கு சூரிய ஒளி தேவை.வீட்டிற்குள்ளேயே இருப்பதால் நம் மேல் சூரிய ஒளி விழுவதில்லை. 

இதனால் தேவையான மெலடோனின் அளவு நம் உடலில் இல்லாமல் போகலாம்.எனவே வீட்டில் இருந்தபடியோ அல்லது வீட்டிற்கு வெளியில் சென்றோ சூரிய ஒளி உங்கள் மேல் விழ நேரம் ஒதுக்குங்கள். உங்கள் கண்களை மூடாமல் அல்லது கண்ணாடி அணிந்து மறைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், உங்கள் கண்களுக்கு சூரிய ஒளி அவசியம்.இதனால் சரியான நேரத்தில் தூங்கவும் முடியும். 

 மன அழுத்தத்தை ஒதுக்கி வையுங்கள்.ஊரடங்கு நேரத்தில் பலர் பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருப்பதால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அனைத்து விதமான பிரச்சனைகளையும் யோசித்து பதற்றமும் அதிகரிக்கிறது.அடுத்து என்ன நடக்கும் என்றே தெரியாத நிலை. இவ்வாறான சூழ்நிலையில் முன்பு நாம் இருந்ததே இல்லை. இது அனைவருக்குமே புதிதுதான். எனவே இந்த சூழலை நினைத்து வருந்தாதீர்கள்.தூங்குவதற்காக படுக்கைக்கு செல்லும்போது வருத்தமாக செல்லாதீர்கள் என்கிறார் பேராசிரியர் கெவின்.

நீங்கள் வீட்டில் இருந்து அலுவலக பணிகளை மேற்கொள்கிறீர்கள் என்றால் படுக்கை அறையில் அலுவலக பணியை மேற்கொள்ளாதீர்கள். தூங்குவது தவிர வேறு எதற்காகவும் படுக்கை அறையை தேர்வு செய்யாதீர்கள்.அப்படி வேறு வழியின்றி படுக்கையில் அமர்ந்து பணிகளை மேற்கொண்டால், அதன் உறையை மாற்றுங்கள்.பணி மேற்கொள்ளும்போது இருந்த உறையை மாற்றுவதன் மூலம், உங்கள் பார்வையிலும் மாற்றம் ஏற்படும்.தூங்கவேண்டும் என உங்கள் மனதிற்கு தோன்றும் அளவிற்கு அந்த இடத்தை மாற்றுங்கள்.



வீட்டில் இருக்கும்போது திரைப்படம் , மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும்போது பொழுதுபோக்கிற்காக மது அருந்த வேண்டும் என தோன்றலாம்.மது அருந்தினால் சீக்கிரம் தூங்க முடியும் என்பது நீண்ட நாட்களுக்கு உள்ள நல்ல தீர்வு அல்ல.மது அருந்த வேண்டும் என்று நினைத்தால் குடிக்கலாம். ஆனால் எப்போதும் எவ்வளவு குடிப்பீற்களோ அவ்வளவு மட்டுமே குடிக்க வேண்டும் என்கிறார் பேராசிரியர் கெவின்.ஆனால், மது அருந்தினால்தான் தூக்கம் வரும் என்ற நிலைக்கு சென்றுவிட கூடாது. அது எந்த வகையிலும் ஆரோக்கியமானது அல்ல.

குழந்தைகளைக் குறி வைக்கும் புதிய பேராபத்து கொரோனாவின் விளைவா தீவிர ஆய்வில் விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகள், சிறுவர்களை தாக்கும் அழற்சி நோய் (maladie inflammatoire grave) குறித்த தகவலைகள் அதிகரித்து வருகிறது.மோசமான இந்த அழற்சி நோய் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் அதிகம்தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.பிரிட்டனில் கடந்த ஒரு வாரமாக பெரும் கவலைகளை இந்த அழற்சி நோய் ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரான்ஸில் அழற்சி நோய் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது உயிராபத்தானதாக இருப்பதாக அந்தநாட்டு சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.இது கொரொனா வைரசின் தாக்குதலா என்ற ஆராய்ச்சி நடந்து வருவதாகவும், இதனை மிகவும் தீவிர விடயமாக எடுத்து ஆய்விற்குள்ளாக்கி உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதனை நான் மிகவும் தீவிர விடயமாக எடுத்துள்ளேன். இது வரைக்கும், எங்களிடம் மருத்துவ ரீதியான எந்த விளக்கங்களும் தரவுகளும் இல்லை. இது கொரொனா வைரசின் தாக்கமா, அல்லது வேறு ஏதும் தொற்றின் தாக்கமா என்பது அறியப்படல் வேண்டும். தற்போதைக்கு எங்களிடம் இதற்கான பதில் இல்லை” என ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.


பிரான்ஸில் பாடசாலைகளை ஆரம்பிக்க தயார்படுத்தும் நிலையில், சிறு பிள்ளைகள் கொரொனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட மாட்டார்கள் என்று அரசு தெரிவித்துள்ள நிலையில், தற்போது சிறு பிள்ளைகளையே கொரொனா தாக்குகின்றதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.இது கொரோனாவின் அறிகுறி என பிரிட்டன் சுகாதாரத்துறையினர் நம்புகிறார்கள். 


இந்த அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் கொரோனா வைரஸால் உயிரிழந்ததாக பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.நாக்குகள், தொண்டையில் கொப்புளம், கண்கள் சிவப்பது, வாந்தி, சோர்வு, சுவாசப்பிரச்சனை ஆகியவை இந்த அழற்சியின் விளைவுகள். உடலில் சிவப்பு கொப்புளங்கள் தோன்றுகிறது.இந்த அழற்சியினால் பாதிக்கப்படுபவர்கள் முகம், கண் வீங்கி பசியின்மையுடன் காணப்படுகிறார்கள். குழந்தைகள், சிறுவர்களே இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.


குழந்தைகளிடம் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், இந்த வகையான விளைவுகள் தென்படுகிறதா என்பது குறித்து ஆராயப்படுகிறது.கவாசாகி (Kawasaki) நோய் என்பது இரத்த நாளங்களின் சுவர்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் ஒரு வகை அழற்சி நோயாகும். அதையொத்ததாக இந்த அழற்சி தென்படுகிறது. 

வீக்கம் இதய தமனிகளை பலவீனப்படுத்தும், இது இதயத்திற்கு இரத்தத்தை வழங்குவதை தடைப்படுத்தி, உயிரிழப்பை ஏற்படுத்தலாம். இந்த நிலை ஒவ்வொரு 100,000 பேரில் எட்டு குழந்தைகளையும் பாதிக்கிறது. ஆனால் இதையொத்த அறிகுறிகளுடன் அண்மை நாளில் பிரிட்டனில் பல குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பிரிட்டனில் சுமார் 20 சிறுவர்கள் இந்த அறிகுறியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர்.

There’s room for one more

After a crazy night out, as soon as I saw my bed I fell flat on my bed. As I was drifting of I noticed that I had my shoes on. I got up to take of my shoes off, as I was taking my shoes off I noticed my window open as I went over to close it I saw a black limo. As I looked closer I realised it looked like a funeral car. As I was trying to figure out what was going on of the men shouted up to me, “ there’s room for one more”. One side of me said why not, what could go wrong but the other side of me told me to stay home. I decided I’d stay home. I politely declined, closed my window and went to sleep.


After one week After finishing my shopping I decided it was time to go home. As I stood waiting for the list I remembered last weeks incident, for some reason it sent a shiver down my spine. As the lift doors slowly opened I stood there dumbstruck. The same man I saw in the car. She looked behind him to see the lift packed with people. She looked back at the man and with a smirk he said “there’s room for one”. Too shocked, I shook my head and stepped back. As the lift doors closed I saw him shrug.


I felt a little creeped but shrugged it off. After few seconds I heard a snap. After another few seconds I heard a crash.The lifts cables had snapped.


 No one survived.

Written By .
Mathan Rashwini
Age 14